கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை


கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில்  நாளை மின்தடை
x

கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கறம்பக்குடி நகர், தீத்தான் விடுதி குழந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன் கோன்பட்டி, பந்துவக்கோட்டை, மருதன்கோன்விடுதி, ரெகுநாதபுரம், கிளாங்காடு கீராத்தூர், காடாம்பட்டி, செங்கமேடு, பல்லவராயன்பத்தை, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, குரும்பிவயல், நெடுவாசல், திருமுருகபட்டினம், நெய்வேலி, திருவோணம், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப்பட்டி கந்தர்வகோட்டை, அக்கட்சி பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசு பட்டி, மெப்குடி ய்பட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று கந்தர்வகோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story