மணலூர்பேட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மணலூர்பேட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை அருகே தேவரடியார்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மணலூர்பேட்டை, சித்தப்பட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கருணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூர், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொறையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர், அருதங்குடி, மிலாரிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story