வாங்கல் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வாங்கல் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 31 May 2022 7:19 PM GMT (Updated: 31 May 2022 7:37 PM GMT)

வாங்கல் பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) குப்புச்சிபாளையம் பீடரில் அவசரகால பணிகள் நடைபெற உள்ளது. எனவே குப்புச்சிபாளையம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story