நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

விருதுநகர், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

விருதுநகர், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. ஆதலால் புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல் ஆலங்குளம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆலங்குளம், ஆலங்குளம் முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர் கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலாண்மறை நாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மின்கோட்டத்தில் நாளை பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் இம்மின்கோட்டத்தில் உள்ள விருதுநகர், கட்டையாபுரம், ரோஜா நகர், நிறைவாழ்வு நகர், புதிய பஸ் நிலையம், முத்துராமலிங்க நகர், பாலம்மாள் நகர், சாத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இதே போன்று சிட்கோ தொழிற்பேட்டை நந்தா லாட்ஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story