வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 10:19 AM GMT)

வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வேதாரண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம், ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5.மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story