ராமாபுரம், நெல்லிக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


ராமாபுரம், நெல்லிக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ராமாபுரம், நெல்லிக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்

கடலூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடலூர் செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமாபுரம் பகுதி

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்குராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் பகுதி

அதேபோல் நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் வள்ளி வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம், மேல்பாதி, திருவள்ளுவர்நகர், அம்பேத்கர்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதி

சிதம்பரம் செயற்பொறியாளர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி.வி.புத்தூர், ஓலையூர், ஆத்துக்குறிச்சி விடுதுடையான், சின்னாத்துகுறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ஊ.மங்கலம் பகுதி

விருத்தாசலம் செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புகுறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமுட்டிகுப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கார் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம் ஆகிய கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கம்மாபுரம் பகுதி

அதேபோல் மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேலப்பாளையூர், வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், தொழுதூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீணனூர், கொடுமனூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story