மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி


மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
x

மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

மதுரை

மத்திய அரசு நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு தேசிய கொடி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார். விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் முன்னிலை வகித்தார். தேசிய கொடி வழங்கும் திட்டத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக முதன்மை இயக்குனர் சந்திரபிகாஷ் கோயல் தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய பொது மேலாளர் ஜானகி ராமன், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது. இதுபோல், விமான நிலையத்திற்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியை வழங்கினர்.


Next Story