நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


நுகர்வோர் தின  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

திருவண்ணாமலையில் தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பரிசு வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பரிசு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தேன்மொழி வரவேற்றார்.

இதனைெயாட்டி நடந்த ஓவியம், பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வழங்கினார்.

முன்னதாக அவர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உலக நுகர்வோர் தினத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி, தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி, பறக்கும்படை தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர்கள் முருகன், மணிகண்டன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.சுப்பிரமணி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் சாமிநாதன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அன்பு எத்திராஜுலு, எக்ஸ்னோரா மாநில செயலாளர் ப.இந்திரராஜன், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் எம்.வெங்கடேசன் உள்பட அரசு அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story