நாமக்கல்லில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொப்பரை கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவுக்கு ரூ.130 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தென்னை மற்றும் பனையில் கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும். கேரளாவை போல ஒரு கிலோ பச்சை தேங்காயை ரூ.32-க்கு தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சோப்பு உற்பத்திக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்த அரசு, உற்பத்தியாளர்களை நிர்பந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன..

இதில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள் குப்புசாமி, வெங்கடாசலம், ராமலிங்கம், சண்முகம், கதிர்வேல் மற்றும் ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story