ஓசூரில் சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஓசூரில் சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 3:26 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் உள்ள ராம்நகர் அண்ணா சிலை அருகே சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்வெங்கடேசன் தலைமைதாங்கினார்.

மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனர் இளவரசன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி மாரண்டப்பள்ளி கிராமத்தில் ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைப்பது, சமூகநீதி மறுப்பு மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் முத்துசாமி, மாநில இளைஞர் அணி தலைவர் ஜெகதீஷ், வக்கீல் சண்முகம், இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் சுந்தரம், செல்வம், சரோஜம்மாஉள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story