சாலை வசதி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆம்பூர் அருகே சாலை வசதி செய்துதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சாலை வசதி செய்துதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஆம்பூரை அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சாலை வசதி செய்து தரக்கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சின்னவெங்கட சமுத்திரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்ததும் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலைைய சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story