புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வேகத்தடை வேண்டும்

சென்னிமலையில் காங்கேயம்- பெருந்துறை ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் அங்கு திரும்பும்போதும், அங்கிருந்து பஸ்கள் வெளிேயறும்போதும் அங்குள்ள ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் சாிவர தெரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க பஸ் நிலையத்தின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், சென்னிமலை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் நாகர்பாளையம் பிரிவு வருகிறது. அந்த பிரிவில் இருந்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரிடத்தில் கழிவு நீர் செல்லும் பாலம் உள்ளது. அந்த பலத்தின் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

மின் விளக்கு சரி செய்யப்படுமா?

அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில் அருகில் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு பழுதடைந்துவிட்டது. இதனால் அதை பழுது பார்த்து சரி செய்யாமல் விட்டுவிட்டனர். இதன்காரணமாக அந்த கோபுரம் கீழே விழுந்து கிடக்கிறது. மின் விளக்கு எரியாததால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிறுவர், சிறுமிகள், பெண்கள் அந்த பகுதியில் இரவு நேரங்களில் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கோபுர மின் விளக்கை சரி செய்து ஒளிர வைக்க வேண்டும்.

சரவணன், அந்தியூர்.

ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகள்

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட வரதம்பாளையம் பகுதியில் ஏராளமான ஆடுகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் ஆடுகள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள தோட்டத்தில் புகுந்து அனைத்தையும் தின்றுவிடுகிறது. மேலும் ரோட்டில் ஆடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சத்தியமங்கலம்.

முறையற்ற வேகத்தடை

பவானி - மேட்டூர் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வேகத்தடை உயரம் குறைவாக இருப்பதுடன் முறையாகவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேகத்தடை முறையாக அமைப்பதுடன், அதன் மீது ஒளிரும் தன்மை கொண்ட பெயிண்டு அடிக்க வேண்டும். மேலும் அதன் அருகில் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானி.

டவுன் பஸ்கள் வருமா?

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சிக்கரசம்பாளையம், பீக்கிரி பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலம் செல்லும் 5, 10, 15 எண் கொண்ட டவுன் பஸ்கள் இந்த கிராமங்களுக்கு வந்து சென்றன. ஆனால் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மீண்டும் சிக்கரசம்பாளையம், பீக்கிரிபாளையத்துக்கு டவுன் பஸ்கள் வந்து செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.

சசிக்குமார், சிக்கரசம்பாளையம்.

பழுதடைந்த மேல்நிலை தொட்டி

பவானி அருகே உள்ள பெருந்தலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு குட்டிபாளையத்தில் ராமர் கோவில் அருகே மேல்நிலை தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் முறையாக தொட்டி மூடப்படாமலும் உள்ளது. எனவே குட்டிபாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பராமரிக்கவேண்டும்.

பொதுமக்கள், மேற்குகுட்டிபாளையம்.



Related Tags :
Next Story