ரூ.20 லட்சத்தில் பாலம் கட்ட பூமிபூஜை


ரூ.20 லட்சத்தில் பாலம் கட்ட பூமிபூஜை
x
திருப்பூர்


மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதியில் ஆத்தூர் கிராமம் உள்ளது. இந்தப் பகுதி திண்டுக்கல்- திருப்பூர் மாவட்டத்தின் எல்லை பகுதியாகும். இங்கிருந்து முத்துகுளம் கால்வாயை கடந்து மறுபகுதிக்கு செல்வதற்கு பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது.

இந்த சூழலில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்கு சென்றபோது மகேந்திரன் எம்.எல்.ஏ. விடம் அந்தப் பகுதி மக்கள் பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர் முயற்சிகள் மேற்கொண்டார். இந்த நிலையில் பாலம் கட்டுமான பணிக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதில் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். சுமார் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பூமிபூஜையின் போது அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story