சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடங்களின் சுகாதாரம் குறித்து கருத்து தெரிவிக்க 'கியூ ஆர்' கோடு வசதி-மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு


சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடங்களின் சுகாதாரம் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு வசதி-மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு
x

சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடங்களின் சுகாதாரம் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதை ஆணையாளர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

'கியூ ஆர்' கோடு வசதி

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று புதிய பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு நடத்தினார். முதலில் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டணம் மற்றும் கட்டணமில்லா கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார்.

அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கழிப்பிடங்களில் போதுமான தண்ணீர் வசதி உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாள் சரியான முறையில் உள்ளதா? என்று மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க 'கியூ ஆர்' கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதையும் அவர் பார்வையிட்டார். அவரது செல்போனில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அதன் இயக்கம் குறித்து சரிபார்த்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதே போன்று பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் உள்ள பாதைகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? நடைபாதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அனுமதி பெறாமல் கடைகள் வைக்கப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

அனுமதி அளிக்கப்பட்டதற்கு மேல் கூடுதலாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா? என்பதை ஆய்வு நடத்தினார்.

பின்னர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் மற்றும் நடைபாதைகள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாறு குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க கோரி அறிவுரை வழங்கினார்.


Next Story