மேற்கு வங்காளத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணி:சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து


மேற்கு வங்காளத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணி:சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து
x

மேற்கு வங்காளத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சேலம்

சூரமங்கலம்,

மேற்கு வங்காளம் நாராயணகர்-பத்ரக் (ஒடிசா) இடையே 3-வது ரெயில் பாதை கட்டுமான பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் சந்திரகாச்சி - மங்களூர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) இன்று(வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் மங்களூர் சென்ட்ரல்-சந்திரகாச்சி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சேலம் வழியாக செல்லும் திப்ரூகர்-கன்னியாகுமரி வாரம் இருமுறை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-15906) நாளை மறுநாள் மற்றும் வருகிற 28-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-15905) மார்ச் மாதம் 2-ந் தேதி மற்றும் 5-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story