தஞ்சை அருகே பரவலாக மழை


தஞ்சை அருகே பரவலாக மழை
x

தஞ்சை அருகே நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

மே.28-

தஞ்சை அருகே நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பரவலாக மழை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் நேற்று இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தி நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கு நன்மைதரக்கூடியதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கல்லணையில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் மழை பெய்தது ஒரு நல்ல சகுனம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

வல்லம்

இதைப்போல தஞ்சை அருகே உள்ள வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆலக்குடி புறவழிச்சாலை பகுதியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும்

செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தற்போது குறுவை சாகுபடிக்காக விளை நிலங்களை உழுது வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை மூலம் உழவு செய்யப்பட்டுள்ள பல விளைநிலங்களில் தெளிப்பு முறை மூலம் விதை நெல்லை தெளித்து சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story