கழுகுமலையில் மழை


கழுகுமலையில் மழை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

கழுகுமலையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் 3 வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் வெளியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. திடீரென மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ¾ மணி நேரம் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் இப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.


Next Story