வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியது: தக்காளி 1½ கிலோ ரூ.50-க்கு விற்பனை


வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியது: தக்காளி 1½ கிலோ ரூ.50-க்கு விற்பனை
x

வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் தக்காளி 1½ கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த நிலையில் சந்தைபேட்டையில் வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் காய்கறிகள் விற்பனை பாதிப்படைந்தது. மழையினால் பொதுமக்கள் வருகையும் குறைந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள் விலையை குறைத்து விற்க தொடங்கினர். காலையில் 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்று வந்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக தக்காளி தேங்கி விடும் என வியாபாரிகள் அச்சமடைந்தனர். இதனால் விலையை குறைத்து விற்க தொடங்கினர். 1½ கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்றனர். தக்காளி திடீரென விலை குறைத்து விற்கப்பட்டதால் கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளியை வாங்கி சென்றனர். கடந்த சில நாட்களாக கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று வந்த நிலையில் விலை சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story