விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகள் ஆய்வு


விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகள் ஆய்வு
x

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவு ரையின் பேரில் தாசில்தார் செந்தில் வேல்முருகன், திருவா டானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய்துறை, காவல் துறை மின்வாரியம் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் தொண்டி அருகே உள்ள சின்ன தொண்டியில் இருந்து தொண்டி கடற்கரைக்கு விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வின்போது தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன், மின்சார வாரியம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story