பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராணிப்பேட்டை மாணவி தேர்வு


பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராணிப்பேட்டை மாணவி தேர்வு
x

15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராணிப்பேட்டை ‌மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை - அம்மூர் ரோடு மாந்தாங்கல் கிராமம் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மகள் மோகனபரியா (வயது 14). காவேரிப்பாக்கம் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கிரிக்கெட் வீராங்கனையான மோகனபிரியா 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் அந்த அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story