ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது


ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது மினிலாரி பறிமுதல்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் ரேஷன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீஸ்காரர்கள் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் நேற்று அதிகாலை காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(வயது 31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story