'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை புதிய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை மீண்டும் திறப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலியாக நாகை புதிய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 10 Aug 2023 7:15 PM GMT (Updated: 10 Aug 2023 7:15 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை மீண்டும் திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை மீண்டும் திறக்கப்பட்டது.

பாலூட்டும் தாய்மார்கள் அறை

நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது. இந்த அறையின் முன்பு மது பாட்டில்கள் கிடந்தன. மேலும் குப்பை கூளங்களாக காட்சி அளித்ததால், பாலூட்டும் தாய்மார்கள் அறையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில் பாலூட்டும் அறை திடீரென பூட்டப்பட்டது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் அவதிப்பட்டனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி பாலூட்டும் அறையை சுற்றி கிடந்த மதுபாட்டில்கள் அகற்றப்பட்டு, தூய்மை பணி நடந்தது. பாலூட்டும் தாய்மார்கள் அறைக்கு என ஒரு தனி பெண் பணியாளரை நியமித்து, அறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story