59 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு


59 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 8:15 PM GMT (Updated: 13 Aug 2023 8:15 PM GMT)

ரெட்டியார்சத்திரத்தில் கோவில் நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரத்தில் பிரசித்திபெற்ற கோபிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலின் கட்டுப்பாட்டில், குச்சலுப்பை பெருமாள், இடையக்கோட்டை செல்லாண்டி அம்மன், சித்தையன் கோட்டை வரதராஜப்பெருமாள் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் கோவில் நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது கோவில்களுக்கு சொந்தமான 59 ஏக்கர், 64 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிலங்களை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் ஒட்டன்சத்திரம் சரக ஆய்வாளர் முன்னிலையில் கோவில் நிலங்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும் அந்த நிலங்களில், இது இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நிலங்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.


Next Story