பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை


பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2023 7:30 PM GMT (Updated: 12 Oct 2023 7:30 PM GMT)

பர்கூர் அருகே பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்பாறு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லப்பாடி கிராமத்தில் இருந்து மரிமானப்பள்ளி, காவிரி நகர் வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜூநாயுடு கொட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டிகானூர், மஸ்திகானூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாம்பாற்றை கடந்து பர்கூர், திருப்பத்தூர் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் ஊரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகள், பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் பாம்பாறு ஆற்றில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை

மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது இந்த வழியே செல்லமுடியாத நிலை ஏற்படும். அப்போது சிப்காட், அச்சமங்கலம் கூட்ரோடு வழியாகவும் அல்லது கப்பல்வாடி, சிகரலப்பள்ளி, சக்கில்நத்தம், மல்லப்பாடி வழியாக பர்கூருக்கு 10 முதல் 15 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர். மரிமானப்பள்ளியில் இருந்து மல்லப்பாடிக்கு செல்லும் கிராம மக்கள் பாம்பாறு ஆற்றில் இறங்கி செல்ல வேண்டி நிலை உள்ளதால் இங்கு பாலம் அமைக்க வேண்டும் என நீண்டக்காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story