துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரிக்கை


துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2022 12:24 AM IST (Updated: 31 Aug 2022 3:26 PM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க ராணிப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் அரசை வலிணுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க ராணிப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் அரசை வலிணுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆத்மநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் ''நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்களின் வேலை நேரத்தினை 9 மணி நேரமாக மாற்ற வேண்டும், சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வைகளின் கல்வித்தகுதியினை பத்தாம் வகுப்பு என மாற்றிட வேண்டும்'' என அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் உள்பட சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story