பச்சையாற்றை தூர்வார கோரிக்கை


பச்சையாற்றை தூர்வார கோரிக்கை
x

களக்காடு அருகே பச்சையாற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே மேலவடகரை பச்சையாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், ஆற்றில் வெள்ளம் வந்தால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

மேலும் அங்குள்ள உறைகிணறுகளை சூழ்ந்தும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்கிருந்துதான் களக்காடு நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே பச்சையாற்றை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story