ஓய்வு பெற்றோர் சிறப்பு பேரவை கூட்டம்


ஓய்வு பெற்றோர் சிறப்பு பேரவை கூட்டம்
x

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வேலூர் கிளையின் சிறப்பு பேரவை கூட்டம் காட்பாடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. வேலூர் கிளை தலைவர் தருமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார்.

மின்வாரியத்தை தனியார் மயமாக்க மயமாக்குவதை தடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்தம் 2022 நிறைவேற்றுவதை தடுக்க வேண்டும். ஓய்வூதியருக்கு எதிரான வாரிய ஆணை எண் 2ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story