அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை


அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை
x

அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த சரத்துகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள டிரைவர், நடத்துனர் டெக்னிக்கல், அலுவலக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டையில் டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்துவதற்கு மண்டல தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போராட்டம் நேற்று மதியம் வரை நீடித்தது. போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story