வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்


வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 30 March 2023 7:00 PM GMT (Updated: 30 March 2023 7:00 PM GMT)

வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை- வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்ட குழுமம் மூலம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் அண்ணா பல்கலைக்கழக தொழிற்நுட்ப வல்லுனர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா தலைமை தாங்கினார். நாகை நகர் மற்றும் ஊரமைப்பு துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் இருதயராஜ் மற்றும் நிர்வாக தந்தையர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story