சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்


சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x

குடியாத்தத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

குடியாத்தத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

குடியாத்தம் நகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியபடி இருக்கும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலரின் மாடு மற்றும் ஆடுகள் குடியாத்தம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் பல இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்த மாடுகள் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீரென புகுந்து காய்கறிகளையும், பழங்களையும் தின்று வியாபாரிகளுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்துகிறது.

அதேபோல் குடியாத்தம் பஸ் நிலையம் பகுதியில் சுற்றி திரிகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த கால்நடைகள் திரிவதால் ஏராளமான பேர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கியமான சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த சாலையில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. இந்த சாலைகளில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் வேலைகளில் சாலைகளில் படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது. சிலநேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்க வேண்டும். அபராதம் விதிக்கப்பட்ட பின் மீண்டும் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் உலவ விட்டால் அந்த கால்நடைகளை நகராட்சி நிர்வாகமே பிடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story