சுகாதாரமற்ற கழிப்பறைகளால் நோய் பரவும் அபாயம்


சுகாதாரமற்ற கழிப்பறைகளால் நோய் பரவும் அபாயம்
x

ஊட்டியில் சுகாதாரமற்ற கழிப்பறைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 3 இடங்களில் கழிப்பறைகள் உள்ளன. இதில் மார்க்கெட்டில் இருந்து காபிஹவுஸ் செல்லும் சாலையில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள டிரைவர்கள் உள்பட பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த கழிப்பறைகளை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story