திருவாடானை பகுதியில் மணல் விலையை குறைக்கக்கோரி சாலை மறியல்
திருவாடானை பகுதியில் மணல் விலையை குறைக்கக்கோரி சாலை மறியல் செய்தனர்
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வதை தடுத்து மணல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை வெள்ளையபுரம் பஜாரில் கட்டிவயல் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் பனஞ்சாயல் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வெள்ளையபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பரக்கத் அலி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மணல் லாரிகள் மற்றும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் குவாரி நிர்வாகத்தின் சார்பில் மணல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்தப் போராட்டத்தால் வெள்ளையபுரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story