திருவட்டார் அருகே அரிவாளால் மாறி மாறி வெட்டிய ரவுடிகள்


திருவட்டார் அருகே   அரிவாளால் மாறி மாறி வெட்டிய ரவுடிகள்
x

திருவட்டார் அருகே 2 ரவுடிகள் அரிவாளால் மாறி, மாறி வெட்டிய சம்பவத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே 2 ரவுடிகள் அரிவாளால் மாறி, மாறி வெட்டிய சம்பவத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்

திருவட்டார் அருகே உள்ள செறுகோல் ஆசாரிப்பொற்றை விளையை சேர்ந்தவர் ஜீசஸ் கிறிஸ்டோபர் (வயது50). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். கிறிஸ்டோபர் மீது அடிதடி, கொலைமிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனர்.

இவரது வீட்டில் அருகில் வசிப்பவர் விஜயன் (58). இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாளால் மாறி மாறி வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் செறுகோல் பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இருவரும் அரிவாளால் மாறி மாறி வெட்டி கொண்டனர்.

இதில் ஜீசஸ் கிறிஸ்டோபருக்கு தலை, கழுத்திலும், விஜயனின் வலது கையிலும் வெட்டு பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கே சாய்ந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ரவுடிகள் அரிவாளால் மோதிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story