நிலக்கரி சாம்பலால் உப்பு உற்பத்தி பாதிப்பு


தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் நிலக்கரி சாம்பலால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நிலக்கரி சாம்பலால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.

உப்பு உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது.

சாம்பல்

இந்த நிலையில் சமீப காலமாக இந்த உப்பு உற்பத்தியில் சில சிக்கல்கள் எழத் தொடங்கி உள்ளன. இந்த உப்பள பாத்திகளில் அவ்வப்போது கறுப்பு நிற சாம்பல் துகள்கள் மிதக்கின்றன. இந்த சாம்பலால் உப்பின் நிறம் கருப்பாக காட்சி அளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தரமான உப்பு உற்பத்தி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். இந்த கருப்பு நிறத்தில் காணப்படும் சாம்பல் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக உப்பு உற்பத்தியாளர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.


Next Story