கோத்தகிரி மார்க்கெட்டில் சுகாதாரப் பணிகள் தீவிரம்


கோத்தகிரி மார்க்கெட்டில் சுகாதாரப் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மார்க்கெட்டில் சுகாதாரப் பணிகள் தீவிரம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகள் மற்றும் பொது இடங்களில் அவ்வப்போது முழு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் முழு சுகாதாரப் பணிகள் நடைபெற்றது. குப்பைகள், செடிகள் அகற்றப்பட்டு, கடைகளுக்கு முன் குளோரின் பவுடர் போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் மற்றும் கடைகளின் முன்புறம் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story