சத்தியமங்கலம் பகுதியில் 3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து ; வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சத்தியமங்கலம் பகுதியில்   3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து ;  வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x

சத்தியமங்கலம் பகுதியில் 3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பகுதியில் 3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக பள்ளிக்கூட வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து சத்தியமங்கலம், தாளவாடி தாலுகாவுக்கு உள்பட்ட பள்ளிக்கூட வாகனங்கள் சத்தியமங்கலத்துக்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த பணி கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் முன்னிலையில் நடந்தது.

தகுதி சான்றிதழ் ரத்து

இதில் பள்ளிக்கூட வாகனங்களில் அவசர கால கதவுகள் சரியாக இயங்குகிறதா? வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளனவா? ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 பள்ளி வாகனங்களில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

மேலும் பள்ளிக்கூட வாகன டிரைவர்களுக்கு, வாகனங்களை கவனத்துடன் இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.

Next Story