எஸ்.சி.- எஸ்.டி. ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.சி.- எஸ்.டி. ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் எஸ்.சி.- எஸ்.டி. ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மத்திய மாநில அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நலச் சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மணிப்பூர் கலவரத்திற்கு துணை போகும் மாநில அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராம், தென்காசி மாவட்ட தலைவர் முருகையா, இணை செயலாளர் சுப்புராஜ், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க தலைவர் முருகன், பொருளாளர் விஜய், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story