பள்ளி மாணவர்கள் தூய்மை பணி


பள்ளி மாணவர்கள் தூய்மை பணி
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

மணப்பாடு பள்ளி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், இளம் மாணவர் இயக்கம் என பல்வேறு இயக்கங்கள் இணைந்து பஸ்நிலையம், பள்ளிக்கு வரும் வழி மற்றும் தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் முள்செடிகளை வெட்டி அகற்றினர். மாணவர்களை பள்ளி இயக்கங்களின் பொறுப்பாசிரியர்கள் பெல்லா, சகிலா, சிலுவை, சத்தியன் மற்றும் ஆசிரியர் வலன்றன்இளங்கோ ஆகியோர் வழி நடத்தினர். சிறப்பாக பணி செய்த மாணவ-மாணவிகளையும், இயக்க பொறுப்பாசிரியர்களையும் பள்ளித் தாளாளர் டிரோஸ் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள் ஆகியோர் பாராட்டினர்.


Next Story