பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு


பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு
x

பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 48). பெயிண்டர். இவருடைய மகன் அப்துல் மஜீத் (22). பேட்டையில் உள்ள பீரோ கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அப்துல்மஜீத் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று குடிபோதையில் வந்த மகனை தந்தை கண்டித்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தந்தையை வெட்டினார். தலையில் பலத்த காயம் அடைந்த சிராஜூதீன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் அப்துல்மஜீத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story