பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு


பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

திசையன்விளை அருகே பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

திசையன்வினை:

திசையன்விளை அருகே குட்டி நயினார் குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 29). இவர் மனைவியிடம் சண்டைபோட்டுவிட்டு தெருவில் நின்று ஆபாசமாக திட்டியுள்ளார். அதை அதே ஊரைச் சேர்ந்த சித்திரை மனைவி இசக்கியம்மாள் (36), மணி (42) ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சுபாசை கைது செய்தார்.


Next Story