சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்தேர்தல் அதிகாரியிடம் அருந்ததியர் புகார்


சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்தேர்தல் அதிகாரியிடம் அருந்ததியர் புகார்
x

அருந்ததியர் புகார்

ஈரோடு

அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க நேற்று வந்தனர். அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-

தேர்தல் விதிமுறையில் பிரசாரத்தின்போது சாதி, மதம், இனம், மொழியை பற்றி பேசக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 13-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி தவறாக பேசி உள்ளார். இதுதொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், அவர் தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story