அழகப்பா அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு


அழகப்பா அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கல்லூரி வேதியியல் துறையின் சார்பில் வேதியியல்- 2023-ல் அண்மை கால மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு வேதியியல் துறை தலைவர் நடராசன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நிலோபர் பேகம் தலைமை தாங்கினார்.

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானிகள் ஜேம்ஸ், ஜோசப் மற்றும் மதியரசு, அழகப்பா பல்கலைக்கழக தொழில் வேதியியல் துறை உதவி பேராசிரியர் விசுவநாதன், கொச்சி அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழக கப்பல் தொழில் நுட்பத்துறை பேராசிரியர் மதியழகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கருத்தரங்கில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் ராதா நன்றி கூறினார்.


Next Story