மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு
x

கரூர், குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கரூர்

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு என தனித்துவமான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் இதர வழக்குகளும் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றம் கரூர் நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும், குளித்தலை நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும் என 2 அமர்வுகளிலும் நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

40 வழக்குகளுக்கு தீர்வு

கரூர், குளித்தலை என 2 அமர்வுகளில் 91 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட தொகை ரூ.1 கோடியே 76 லட்சத்து 41 ஆயிரத்து 531 ஆகும்.

நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், பார் அசோசியேசன் நிர்வாகிகள், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.

குளித்தலை

குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தலைமை தாங்கினார். அப்போது, 26 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 670-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற நீதிபதி அசோக்பிரசாத், குளித்தலை வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story