மக்கள் நீதிமன்றத்தில் 85 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 85 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 85 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 85 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்த பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) ராஜமூர்த்தி, அரசு வக்கீல்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் மற்றும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story