போலி முகநூல் கணக்கு மூலம் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை


போலி முகநூல் கணக்கு மூலம் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

போலி முகநூல் கணக்கு மூலம் மதுரை இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை,

போலி முகநூல் கணக்கு மூலம் மதுரை இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போலி முகநூல் கணக்கு

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி எனது பணத்தை மோசடி செய்து எடுத்துக்கொண்டனர். பின்னர் அந்த முகநூலில் குறைந்த விலையில் தமிழகம் முழுவதும் பெண்கள் சப்ளை செய்யப்படும் என்று அவதூறான தகவல் பதிவேற்றம் செய்தனர். மேலும் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், பாலியல் தொந்தரவு கொடுத்து, கொலை மிரட்டலும் விடுத்தனர். இவ்வாறு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அந்த முகநூல் கணக்கு மூலம் இந்த ேமாசடி நடந்துள்ளது என்றும் கூறி இருந்தார்.

எனவே இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

சென்னை வாலிபர் கைது

அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில், சென்னை ஆவடியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர், அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

எனவே பொதுமக்கள் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யாராவது பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றி போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தி உள்ளார்.


Related Tags :
Next Story