சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது


சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கோவில் கொடைவிழா நேற்று கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வருகிற 27-ந்தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 28-ந் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. முக்கிய நிகழ்வான கொடை விழா 29-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு அம்மன் சந்தன காப்பு தரிசனம், சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மத்தாப்பு வான வேடிக்கை, மேளதாளங்களுடன் கற்பகப் பொன் சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு அன்னதானம் நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 8 மணிக்கு வீதி உலா செல்லும் அம்மன் கோவில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story