சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் சங்க கூட்டம்
தென்காசி மாவட்ட சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் சங்க கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்க கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜசேகர், மரஅறுவை ஆலை சங்க செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சார்பாக தென்காசி மாவட்ட தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி வருகிற மே 6, 7 ஆகிய தேதிகளில் தென்காசியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கண்காட்சியில் விவசாய வேளாண்மை எந்திரங்கள், அரிசி ஆலை, மரஅறுவை ஆலை, ஆயத்த ஆடை, ஓடு மற்றும் செங்கல், கட்டுமான துறை சார்ந்த நிறுவனங்கள், எந்திர உற்பத்தியாளர்கள் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து வர்த்தக நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. மேலும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு துறைகள், வங்கி நிறுவனங்களும் கலந்து கொள்ள இருக்கின்றன. புதிய தொழில் முனைவோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில் யுத்தி சார்ந்த போட்டிகள் நடைபெற உள்ளது.