75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம்
பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் 24-ந் தேதி வரை நடக்கிறது.
பாபநாசம்;
பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் 24-ந் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து பாபநாசம் தலைமை அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுசேமிப்பு முகாம்
பாபநாசம் உட்கோட்டத்தில் உள்ள 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சிறப்பு முகாம் தொடங்கி 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. அப்போது அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடர் வாய்ப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், குறித்த கால வாய்ப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வாய்ப்பு நிதி திட்டம், முதியோருக்கான சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம், ஆகிய சேமிப்பு திட்டங்களில் பொதுமக்களும், அஞ்சலக வாடிக்கையாளர்களும் சேர்ந்து பயன் பெறலாம்.
ஆதார் நகல்
திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், பான் கார்டு நகலுடன் வர வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் அனைத்து அஞ்சலகங்களும் செயல்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.