வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள் மற்றும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். அந்த படிவங்களை பெற்று ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----


Next Story