சேலம் மாநகரில்காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்


சேலம் மாநகரில்காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்
x

சேலம் மாநகரில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

சேலம்

சேலம்,

சேலம் மாநகரில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடலை கண்டுபிடிப்பது தொடர்பான சிறப்பு முகாம் லைன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை காண்பித்து அவர்கள் திரும்பி வந்துவிட்டார்களா? என்று அவர்களது உறவினர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. சேலத்தில் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 202 பேர் காணாமல் போயியுள்ளதாகவும், அதேபோல் 229 அடையாள தெரியாத உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று நடந்த சிறப்பு முகாமில் காணாமல் போன 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story